கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

வீடுகளிலோ அல்லது கோவிலிலோ சாமி கும்பிடுகிற பொழுது, படையல் வைப்பது வழக்கம். அதில் நமக்குப் பிடித்தது, சாமிக்குப் பிடித்தது என எல்லாவற்றையும் செய்து வாழை இலையில் அடுக்கி வைப்போம். ஆனால் படைப்பதற்கென்று சில முறைகள் இருக்கின்றன. அதன்படி படைப்பது தான் கடவுளை மகிழ்விக்கும்.


அந்த படையல் முறையைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.



வீடுகளில் அல்லது கோயில்களில் மதச் சடங்குகள் அல்லது பூஜைகள் செய்யும்போது தெய்வங்களுக்கு உணவை நைவேத்தியமாக வைப்பது இந்துக்களின்/இந்து தர்மத்தின் வழக்கமான நடைமுறையாகும். இந்த படையல் நைவேத்தியம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மனிதனின் உண்மையான மொத்த நிலையை குறிக்கிறது.


படையல் வைப்பது ஒரு பூஜையின் கடைசி படியாகும். ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு என்ன பிரசாதம் வைக்கப்பட வேண்டும் என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில பிடித்தமான உணவுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.



உதாரணமாக, பாயசம் அல்லது விஷ்ணுவுக்கு பால் பாயசமும், கணபதிக்கு மோதகமும், அம்மனுக்கு கூழும் படைக்கப்படுகிறது. குறிப்பிட்ட உணவை குறிப்பிட்ட தெய்வத்திற்கு பிரசாதமாக சமர்ப்பிப்பதன் மூலம் நிறைய நல்ல பலன்களை பெற முடியும்.


படைத்த நைவேத்தியத்தை தெய்வங்கள் அதை அன்புடன் ஏற்றுக்கொண்ட பிறகு அது பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகு அனைவரும் சிறு பங்காக எடுத்துக் கொள்கின்றனர். இந்த நைவேத்தியம் பிரசாதமாக அனைவருக்கும் பங்களிக்கப்பட்ட பிறகு, அதில் கடவுளின் சக்தி நிரம்பி அதை சாப்பிடும் அனைவருக்கும் நன்மை அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த கட்டுரையில் நைவேத்தியம் படைப்பதன் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இந்த செயலின் பல்வேறு கோணங்களைப் பற்றிய தகவல்களை தருகிறோம்.